மணலூர்பேட்டையில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்


மணலூர்பேட்டையில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 April 2021 11:05 PM IST (Updated: 24 April 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டையில் முககவசம் அணியாத 20 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் தலைமையில், தேர்தல் துணை தாசில்தார் பாஸ்கரன், மணலூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்ட குழுவினர் மணலூர்பேட்டையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முக கவசம் அணியாத பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என 19 பேருக்கு தலா ரூ.200 அபாரதமும், ஒருவருக்கு ரூ.500 அபராதமும் விதித்து ரூ.4 ஆயிரத்து 300 வசூலித்தனர். 

Next Story