மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 April 2021 11:25 PM IST (Updated: 24 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் மாரியப்பன் காலனியை சேர்ந்த ஜோயல்மான்சிங் (வயது 40). இவர் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு  வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த நெப்போலியன் (35) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜோயல்மான்சிங் மட்டும் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜோயல்மான்சிங்கின் அண்ணன் ஜான்பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story