மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம்


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2021 11:27 PM IST (Updated: 24 April 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் கரூர் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி கட்ட மக்களை வற்புறுத்தி வருகின்றனர். குடிநீர் வரி கட்டவில்லையென்றால் குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவோம் என கூறி வருகின்றனர். இதனை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா காலத்தில் கரூர் நகராட்சி நிர்வாகம் இந்த வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு 2-ம் தவணை ஊசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பதற்கு மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் சூழலில் உரிய வகையில் சிகிச்சை கிடைக்க கூடுதல் படுக்கை வசதிகளையும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர்.இளங்கோ மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் நன்றி கூறினர்.

Next Story