மொய் விருந்தில் மோதல்
கீரமங்கலத்தில் மொய் விருந்தில் மோதல் ஏற்பட்டது. இதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
கீரமங்கலம், ஏப்.25-
கீரமங்கலத்தில் மொய் விருந்தில் மோதல் ஏற்பட்டது. இதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
மொய் விருந்து
கீரமங்கலம் பகுதியில் பிரபலமான மொய் விருந்து மற்றும் காதணி விழா கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கும் முன்பு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கீரமங்கலத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கீரமங்கலம், மேற்பனைக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலர் இணைந்து காதணி மற்றும் மொய்விருந்து விழா நடத்தினர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிகமாக கூட்டம் கூட்டியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்.
குடிதண்ணீர் கேட்டு தாக்குதல்
இதற்கிடையில் மொய் விருந்து நடந்து கொண்டிருந்த போது கீரமங்கலம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் குணால் (வயது 21) குடிதண்ணீர் பாட்டில் கொடுத்துள்ளார். அப்போது மேற்பனைக்காடு பகுதியைச் சேர்ந்த ஆசைக்கண்ணு மகன் திருமுருகன் (25), செல்வராஜ் மகன் நிவிஸ் (21) மற்றும் அவர்களுடன் இருந்த சிலர் குணாலிடம் மேலும் தண்ணீர் பாட்டில் கேட்டு தகராறு செய்து தாக்கினர்.
இதை கோகுலின் பக்கத்து வீட்டை சேர்ந்த தியாகராஜன் மனைவி ராணி (45) தட்டி கேட்டார். அப்போது, அங்குகிடந்த பிளாஸ்டிக் சேர்களை தூக்கி எரிந்து தாக்கினர். இந்த தாக்குதலில் குணால், ராணி ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story