கரூர் மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் புதிதாக 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
72 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாந்தோணிமலையை சேர்ந்த 28 வயது பெண், கடவூரை சேர்ந்த 58 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 42 வயது ஆண், சின்னதாராபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 41 வயது பெண், குளித்தலையை சேர்ந்த 23 வயது வாலிபர், திருக்காம்புலியூரை சேர்ந்த 67 வயது மூதாட்டி, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 52 வயது பெண், 48 வயது ஆண், தவுட்டுபாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 52 வயது ஆண், காந்திகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ஐந்து ரோட்டை சேர்ந்த 38 வயது ஆண்.
க.பரமத்தி
ஜெகதாபியை சேர்ந்த 33 வயது வாலிபர், வையாபுரிநகரை சேர்ந்த 62 வயது முதியவர், வாங்கலை சேர்ந்த 45 வயது ஆண், ராயனூரை சேர்ந்த 47 வயது ஆண், வெண்ணைமலையை சேர்ந்த 20 வயது வாலிபர், மாயனூரை சேர்ந்த 40 வயது ஆண், 43 வயது ஆண், கீழவெளியூரை சேர்ந்த 26 வயது வாலிபர், பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 38 வயது ஆண், க.பரமத்தியை சேர்ந்த 60 வயது பெண், 33 வயது பெண், மண்மங்கலத்தை சேர்ந்த 47 வயது ஆண், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண் உள்பட 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story