வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் பொதுமக்களுக்கு, கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா வேண்டுகோள்


வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்  பொதுமக்களுக்கு, கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 April 2021 11:35 PM IST (Updated: 24 April 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் மூலம் கொரோனா நோய்தொற்று குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆய்வு செய்து வருகிறோம்

மேலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைக்கழுவ கிருமிநாசினிவழங்குதல், உடல் வெப்பநிலையை சோதித்தல் போன்ற கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்து வருகிறோம்.
ஆய்வின்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு அபாரதம் விதித்தும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக முக கவசம் அணிய கடை உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

முககவசம் அணிய வேண்டும்

மேலும் பொதுமக்கள் கொரோனா 2-ம் கட்ட பரவலை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவை மற்றும் பணிகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story