மற்றொரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி


மற்றொரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி
x
தினத்தந்தி 25 April 2021 12:54 AM IST (Updated: 25 April 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

கீழடி அருகே கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கீழடி அருகே கொந்தகையில் நேற்று முன்தினம் நடந்த முதுமக்கள் தாழி ஆய்வில் மனித மண்டை ஓடு, விலா எலும்புகள், கை, கால் எலும்புகள், முட்டு எலும்புகள், சிறிய எலும்புகள், இரும்பு வாள், 2 கூம்பு வடிவ மண் கிண்ணங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இரும்பு வாள் இருந்ததால் முதுமக்கள் தாழியில் இறந்தவர் போர் வீரனாக இருக்கலாம் என கருதப்பட்டது. அதில் கிடைக்கப்பட்ட எலும்பு கூடுகள் மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளனர். மரபணு சோதனைக்கு பிறகே இறந்தவர் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
இந்த நிலையில் நேற்று மற்றொரு முதுமக்கள் தாழியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு சில சிறிய எலும்புகள் எடுக்கப்பட்டு உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆய்வு பணியை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்து உள்ளனர்.


Next Story