மீன்கடைகளில் கூட்டம் இல்லை
ஈரோட்டில் மீன்கடைகளில் கூட்டம் இல்லை
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயக்கவும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதுபோல் இன்று மீன் கடைகள் நடத்தவும் தடை உள்ளதால் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று மீன் விற்பனை பரபரப்பாக நடந்தது.
கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட், ஸ்டோனி பாலம் அருகே மணல்மேடு பகுதி மீன் சந்தைகள் நேற்று இயங்கின.
ஆனால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் மீன் வாங்க வந்தனர். கருங்கல் பாளையம் சந்தையில் சற்று அதிகமாக பொதுமக்கள் இருந்தனர். ஆனாலும் எதிர்பார்த்த அளவு மீன் விற்பனை இல்லை என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமைகளில் பலர் அசைவ உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் சனிக்கிழமைகளில் வழக்கமாக மீன் விற்பனை குறைவாக இருக்கும். தற்போது ஊரடங்கை முன்னிட்டு இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த விற்பனை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story