சேலத்தில் ஆட்டோவை திருடியவர் கைது


சேலத்தில் ஆட்டோவை திருடியவர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 3:24 AM IST (Updated: 25 April 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவை திருடியவர் கைது

சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 19-ந் தேதி ஜவகர் மில் பகுதியில் உள்ள வீட்டுக்கு ஆட்களை ஏற்றி செல்வதற்காக வந்தார். அப்போது, அந்த வீட்டில் இருந்து யாரும் வராததால் உள்ளே சென்று விசாரிக்க முருகேசன் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர் பார்த்தபோது, வெளியில் நிறுத்தியிருந்த ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் ஆட்டோ கிடைக்கவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் முருகேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தநிலையில், நேற்று காலை போலீசார் ஜவகர் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஆட்டோவில் இருந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஓட்டி வந்தது திருட்டு போன முருகேசனின் ஆட்டோ என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை திருடியதாக வாழப்பாடி அருகே உள்ள பேளூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story