சேலம் மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியது


சேலம் மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 25 April 2021 3:24 AM IST (Updated: 25 April 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 490 பேருக்கு தொற்று

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 478 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 490 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 256 பேர், ஓமலூரில் 37 பேர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 20 பேர், பனமரத்துப்பட்டியில் 19 பேர், நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 16 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 14 பேர், சேலம் ஒன்றியம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், மேச்சேரியில் 11 பேர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், மேட்டூரில் 7 பேர், எடப்பாடியில் 5 பேர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
38 ஆயிரத்தை தாண்டியது
வெளிமாநிலத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 199 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3,179 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 78 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும், 67 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 489 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story