பல்லடம் தொகுதியின் முடிவு 40 சுற்றுகளுக்கு பிறகு தெரியும்
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பல்லடம் தொகுதியின் முடிவு 40 சுற்றுகளுக்கு பிறகே தெரியும். தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவு முதலில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பல்லடம் தொகுதியின் முடிவு 40 சுற்றுகளுக்கு பிறகே தெரியும். தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவு முதலில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையம் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் 8 கட்டிடங்களில் வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகத்தில் 190 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
14 மேஜைகள்
ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரும்பு வலை அமைத்து மேஜை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதுபோல் ஒரு தொகுதிக்கு தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 2 மேஜைகள் தனியாக போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்கு எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தும் வாக்கு எண்ணும் நேரம் அதிகரிக்கும். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் உள்ளனர். 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். காங்கேயத்தில் 26 வேட்பாளர்கள் உள்ளனர். 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. 27 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பல்லடம் தொகுதி
அவினாசி தொகுதியில் 12 வேட்பாளர்கள் உள்ளனர். 401 வாக்குச்சாவடிகள் உள்ளன. 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். 535 வாக்குச்சாவடிகள் உள்ளன. 39 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் உள்ளனர். 401 வாக்குச்சாவடிகள் உள்ளன. 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் உள்ளனர். 548 வாக்குச்சாவடிகள் உள்ளன. 40 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. உடுமலை தொகுதியில் 15 வேட்பாளர்கள் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. 28 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். 357 வாக்குச்சாவடிகள் உள்ளன. 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு முதலில் தெரியவரும். பல்லடம் தொகுதியின் தேர்தல் முடிவு கடைசியாக தெரியவரும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story