பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்
ஜெயங்கொண்டத்தில் பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தமிழகம் முழுவதும் கொரானா தோற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து, நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் நான்கு ரோட்டில் நான்கு திசைகளில் இருந்தும் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நான்கு புறமும் தடுப்பு அரண்கள் அமைக்க தயார்படுத்தினர்.
Related Tags :
Next Story