கொரோனா அச்சம் காரணமாக நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை
கொரோனா அச்சம் காரணமாக நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை.
நாமக்கல்,
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தை சனிக்கிழமைகளில் கூடும். அந்த வகையில் நேற்று கூடிய சந்தைக்கு கொரோனா அச்சம் காரணமாக குறைவான நபர்களே வந்திருந்தனர்.
இதனால் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. குறிப்பாக காரவள்ளி பகுதியில் இருந்து மாம்பழங்களை அதிக அளவில் வாங்கி வியாபாரிகள் விற்பனைக்கு குவித்திருந்தனர். இந்த மாம்பழங்கள் கிளி மூக்கு ரகம் கிலோ ரூ.20-க்கும், பங்கனபள்ளி ரகம் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மிகவும் குறைவு என கூறிய வியாபாரிகள், கொரோனா அச்சம் காரணமாக விற்பனை மந்தமாகி இருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story