176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன


176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
x
தினத்தந்தி 25 April 2021 4:16 AM IST (Updated: 25 April 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரியில் 176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

திருப்பூர்
திருப்பூரில் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரியில் 176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் அறை
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
வாக்கு எண்ணும் மையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே கல்லூரி வளாகம் முழுவதும் 190 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள், தபால் வாக்கு எண்ண 2 மேஜைகள் அமைக்கப்படுகிறது.
176 கண்காணிப்பு கேமராக்கள்
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா, அறையை சுற்றிலும் 4 கேமராக்கள், தேர்தல் பார்வையாளர் மேஜை மற்றும் ஒவ்வொரு சுற்றையும் அறிவிக்கும் வகையில் அறிவிப்புபலகை ஆகிய இடங்களில் தலா ஒரு கேமரா என ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் அறையில் மொத்தம் 176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது அனைத்து நிகழ்வுகளையும் கேமரா மூலமாக கண்காணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story