திருச்செங்கோட்டில் அனுமதியின்றி இயங்கிய 3 மசாஜ் சென்டர்களுக்கு சீல்
திருச்செங்கோட்டில் அனுமதியின்றி இயங்கிய 3 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மசாஜ் சென்டர்கள் நடத்தப்பட்டு வருவதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து துணை தாசில்தார் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, திருச்செங்கோடு நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சியாம் சுந்தர், சுரேஷ் ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
சீல்
அதில் திருச்செங்கோட்டில் வேலூர் சாலையில் உள்ள பசுமை கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர், நேச்சுரல் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் மற்றும் ராயல் ஜோதி மசாஜ் சென்டர் ஆகியவை உரிய ஆவணங்கள் இன்றியும், அனுமதியின்றியும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 மசாஜ் சென்டர்களையும் பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story