கொங்கணாபுரத்தில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.
எடப்பாடி,
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சேலம், மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1100 பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் சென்றது. டி.டி.எச். ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ 9 ஆயிரத்து 609 வரையும், பி.டி. ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 450 முதல் ரூ. 8 ஆயிரத்து 540 வரையும் ஏலம் சென்றது. இந்த பருத்தி ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு திருப்பூர், கோவை பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்துகொண்டு பருத்தி மூட்டைகளை ஏலம் எடுத்தனர்.
Related Tags :
Next Story