நங்கவள்ளி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி


நங்கவள்ளி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
x
தினத்தந்தி 25 April 2021 5:33 AM IST (Updated: 25 April 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி.

மேச்சேரி,

நங்கவள்ளி அருகே பெரிய சோரகை வைரம் தெருவை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் கோபி (வயது 15). இவன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தவறி கீழே இருந்த இரும்பு கலப்பையின் மீது விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த கோபியை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story