பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 April 2021 6:46 AM IST (Updated: 25 April 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம், பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார்.

செம்பாக்கம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் சமுதாய பங்களிப்பு மூலமே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story