மரக்கன்று நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் நோயாளிகளிடம் மருந்து சீட்டில் எழுதி கொடுக்கிறார்


மரக்கன்று நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் நோயாளிகளிடம் மருந்து சீட்டில் எழுதி கொடுக்கிறார்
x
தினத்தந்தி 25 April 2021 9:23 AM IST (Updated: 25 April 2021 9:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மருந்து சீட்டு மூலம் மரக்கன்று நடுமாறு டாக்டர் ஒருவர் நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மும்பை, 

நாடு முழுவதும் 2-வது கொரோனா அலைவீசி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு வழங்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அகமது நகரை சேர்ந்த டாக்டர் ஒருவர் மரக்கன்று நடுவது குறித்து நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

அகமதுநகரில் சஞ்சீவானி என்ற ஆஸ்பத்திரி நடத்தி வரும் டாக்டர் கோமல் காசல். இவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து சீட்டில் கடைசியில் நோய் குணமானவுடன் ஒரு மரக்கன்றை நட வேண்டும் என எழுதி கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ கொரோனா பரவல் காரணமாக எனக்கு ரெம்டெசிவிர், வென்டிலேட்டர்கள் கேட்டு போன் வந்து கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக போன் அழைப்புகள் வரத்தொடங்கின. அப்போது இந்த சிந்தனை எனக்கு வந்தது. அதன்பிறகு தான் எனது மருந்து சீட்டின் அடிப்பகுதியில் ஆக்சிஜன் தரும் மரக்கன்றுகளை நடுங்கள் என எனது நோயாளிகளை வலியுறுத்தினேன். தற்போது இந்த தகவலுடன் மருந்து சீட்டில் ரப்பர் ஸ்டாம்பு குத்தி வருகிறேன்” என்றார்.

Next Story