விசாகப்பட்டினத்தில் இருந்து ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரெயில் மராட்டியம் வந்தது


விசாகப்பட்டினத்தில் இருந்து ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மராட்டியம் வந்தது
x
தினத்தந்தி 25 April 2021 9:28 AM IST (Updated: 25 April 2021 9:28 AM IST)
t-max-icont-min-icon

விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ' ரெயில் மராட்டியம் வந்து சேர்ந்தது.

மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவதால் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாட்டின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் காலி டேங்கர் லாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை நவிமும்பை கலம்பொலி பகுதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. அங்கு உள்ள ஆலையில் 7 டேங்கர் லாரிகளில் சுமார் 100 டன் அளவுக்கு திரவ ஆக்சிஜன் நிரப்பட்டது.

பின்னர் அந்த ரெயில் விசாகப்பட்டினத்தில் இருந்து மராட்டியத்திற்கு புறப்பட்டு வந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு 8.10 மணிக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் நாக்பூர் வந்தடைந்தது. அங்கு 3 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டன.

பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு நேற்று காலை 10.25 மணிக்கு நாசிக் ரோடு ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. அங்கு மீதமுள்ள 4 லாரிகளும் இறக்கப்பட்டன.

Next Story