புதிதாக 67 ஆயிரம் பேருக்கு தொற்று மேலும் 676 பேர் கொரோனாவுக்கு பலி மும்பையில் பாதிப்பு குறைந்தது


புதிதாக 67 ஆயிரம் பேருக்கு தொற்று மேலும் 676 பேர் கொரோனாவுக்கு பலி மும்பையில் பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 25 April 2021 9:57 AM IST (Updated: 25 April 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 676 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நோய் பாதிப்பு குறைந்து உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 67 ஆயிரத்து 160 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்து 28 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 34 லட்சத்து 8 ஆயிரத்து 610 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 61 ஆயிரத்து 818 பேர் குணமாகினர்.

தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 480 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 676 ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 62 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று தலைநகர் மும்பையில் நோய் பாதிப்பு குறைந்து, குணமானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. நேற்று நகரில் புதிதாக 5 ஆயிரத்து 888 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதேபோல 8 ஆயிரத்து 549 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மேலும் 71 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். நகரில் இதுவரை 6 லட்சத்து 22 ஆயிரத்து 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story