பழவேற்காட்டில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது


பழவேற்காட்டில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 5:08 PM IST (Updated: 25 April 2021 5:08 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் இளம்பெண்ணை தாக்கி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு இருளர் காலனியில் உள்ள முட்புதரில் இளம்பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லைட்ஹவுஸ் ஊராட்சி வைரவன்குப்பம் கிராமத்தைச் சார்ந்த பன்னீர் (வயது19) என்ற வாலிபர் இளம்பெண்ணை தாக்கி தூக்கி சென்று பலாத்காரம் செய்தார். அப்போது அவர் தப்பி ஓட முயன்றபோது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில், பொதுமக்கள் பிடித்து வைத்த அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர்.இதனைத்தொடர்ந்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் பன்னீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story