மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் களையிழந்த அயல்நாட்டு மதுக்கடை
சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் போதிய வியாபாரம் இன்றி களையிழந்து காணப்பட்டது.
மாமல்லபுரம்,
கொரோனா தொற்று 2-வது அலை பரவலால் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டு அங்குள்ள புராதன சின்னங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து முடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா வரும் மது பிரியர்கள் அதிகமானோர் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுபான கடை போதிய மதுபாட்டில்கள் விற்பனையின்றி களையிழந்து காணப்படுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நிலையிலும், மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுக்கடைக்கு விடுமுறை என்ற போதிலும் நேற்று குறைந்த அளவிலான மதுபிரியர்களே வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்வதை காண முடிந்தது.
மதுபிரியர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் நான்கு, நான்கு பேராக மட்டுமே மது வாங்க மதுக்கடை நிர்வாகம் அனுமதித்தது. முன்னதாக இந்த கடைக்கு வந்தவர்களை நுழைவு வாயிலில் டாஸ்மாக் பணியாளர்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தும், முக கவசம் அணிந்தும் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர்.
Related Tags :
Next Story