திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை, கலெக்டர் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2021 6:20 PM IST (Updated: 25 April 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை, கலெக்டர் தகவல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்் தேதி வாணியம்பாடியில் உள்ள மருதர்கேசரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அனைவரும் அவசியம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

நோய்த்தொற்று உறுதி ஆனால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முடியாது. இதுகுறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

Next Story