சாலைகள் வெறிச்சோடின


சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 25 April 2021 6:40 PM IST (Updated: 25 April 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவால் தாராபுரம் பஸ்நிலையம், பைபாஸ் ரோடு, கடைவீதி பகுதிகள் மற்றுமட காங்கேயத்தில் நேற்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் திறக்கப்படவில்லை.

தாராபுரம்
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவால் தாராபுரம் பஸ்நிலையம், பைபாஸ் ரோடு, கடைவீதி பகுதிகள் மற்றுமட காங்கேயத்தில் நேற்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் திறக்கப்படவில்லை. 
முழு ஊரடங்கு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக தமிழகத்தில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து தாராபுரத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோக்கள் லாாிகள் கால் டாக்சிகள் என அனைத்தும் ஓடவில்லை. அதுபோன்று பேக்காிகள் மளிகை கடைகள் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்கள் நகைக்கடை பாத்திரக்கடை ஜவுளிக்கடை பேன்சி ஸ்டோா் உட்படஅனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. உழவா் சந்தை, காய்கறி மாா்கெட் செயல்படவில்லை. மேலும் இறைச்சி கடைகள் மீன் கடைகள் மூடப்பட்டன.
 இந்தநிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள் மளிகைக்கடைகள் பால் கடைகள் பெட்ரோல் பங்குகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை மட்டுமே செயல்பட்டன. தாராபுரம்  துணை போலீஸ்  சூப்பிரண்டு ஜெயராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சுற்றி திரிந்தவர்களை போக்குவரத்து போலீசாா் எச்சாித்து அனுப்பிவைத்தனா். முழு ஊரடங்கால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தாராபுரம் பஸ்நிலையம், பைபாஸ்ரோடு தாலுகா அலுவலக ரோடு, கடைவீதி ஆகியவை நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
காங்கேயம்
முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாகவும், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் காங்கேயத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள் போன்ற அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் அத்யாவசிய பொருட்களான மருந்து கடைகள் பால் விற்பனை நிலையங்கள் பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து கடைகளும் பூட்டிக்கிடந்தன. மேலும் காங்கேயம் நகர சாலைகளான திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை பழையகோட்டை சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி அமைதியாக காணப்பட்டது.
 காங்கேயம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர். 

Next Story