கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது


கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 April 2021 6:45 PM IST (Updated: 25 April 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்ததையும், விற்பனை செய்த  ரூ.900 ஆகியவற்றை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த ராசு மகன் மணிகண்டன் (வயது23), அருள்செல்வம் மகன் அஜித்குமார் (20), பாஸ்கரன் மகன் பரணி (21), நாகராஜன் மகன் ராகேஷ் (19), ஓம்சக்திநகர் 5-வது தெரு கண்ணன் மகன் பிரவீன் சபரி (19) என்பது தெரிந்தது. அவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story