வீடுகளுக்கு படையெடுத்த பூச்சிகள்


வீடுகளுக்கு படையெடுத்த பூச்சிகள்
x
தினத்தந்தி 25 April 2021 6:49 PM IST (Updated: 25 April 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கு படையெடுத்த பூச்சிகள்

பல்லடம்
பல்லடம் - உடுமலை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன குடோன் உள்ளது. இங்கு மக்காச்சோளம், கருவாடு, சோயா உள்ளிட்ட கோழி தீவன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனுக்கு எதிர்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திடீரென ஏராளமான செல் பூச்சிகள் படையெடுத்துள்ளன. மரங்களிலிருந்து இவைகள் வருகின்றன என நினைத்த பொதுமக்கள். பூச்சி மருந்துகளை வைத்து, அவைகளை கட்டுப்படுத்தி வந்தனர். ஆனால் மீண்டும், பூச்சிகள் அதிகளவில் வந்ததையடுத்து இது எங்கு உற்பத்தியாகிறது என தீவிரமாக தேடியபோது. கோழித் தீவன குடோனில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அந்த கோழி தீவன குடோன் நிர்வாகத்தினரரிடமும், வருவாய்துறையினரிடமும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள். கோழித் தீவன குடோனில், இருந்து பூச்சிகள் வராமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கெட்டுப்போன பொருட்களாக இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதற்கு கோழித் தீவன குடோன் தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூச்சிகளை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தனர்.
-----------

Next Story