மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 6:55 PM IST (Updated: 25 April 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.பிளாக் பஸ்நிறுத்தம் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் மண்எண்ணெய் கேனுடன் நின்று கொண்டு தரக்குறைவாக பேசிக் கொண்டு அந்த பகுதியில் செல்வோரை கொளுத்திவிடுவதாக மிரட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் ஆசாரிதெருவை சேர்ந்த சித்திரைவேலு மகன் சுரேஷ்குமார் (வயது39) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story