ஊரடங்கின்போது சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம்
ஊரடங்கின்போது சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழக்கரை,
கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கீழக்கரையில் உள்ள சீதக்காதி சாலை, இந்து பஜார், கீழக்கரை முக்குரோடு போன்ற அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனை கண்காணிக்கும் வகையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெளியில் சுற்றித் திரிந்த வர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கொரானா குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு உத்தரவின்படி ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா இல்லாத தமிழகமாக மாற்ற முடியும். தேவையில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story