தூத்துக்குடியில் வெளிமாநில லாட்டரி விற்றவர் கைது
தினத்தந்தி 25 April 2021 7:18 PM IST (Updated: 25 April 2021 7:18 PM IST)
Text Sizeதூத்துக்குடியில் வெளிமாநில லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, சின்னக்கோவில் அருகே குமாரகிரி தேரி ரோட்டை சேர்ந்த முத்தையா மகன் சூரத்குமார் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரியை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக சூரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire