விபத்தில் மின்வாரிய பணியாளர் சாவு
விபத்தில் மின்வாரிய பணியாளர் இறந்து போனார்.
கழுகுமலை:
நாலாட்டின்புத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் காளிராஜ் (வயது 21). இவர் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கழுகுமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கழுகுமலை அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் திடீரென நிலைகுலைந்த அவர் சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளார். காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் ஏற்கனவே காளிராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story