அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அடைக்கப்பட்டதால் திருமணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் போராட்டம்


அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம்  அடைக்கப்பட்டதால் திருமணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2021 7:32 PM IST (Updated: 25 April 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக முன்புதிவு செய்த 10-க்கும் மேற்பட்ட மணமக்கள் அவரது உறவினர்களுடன் காலை சுமார் 6 மணியளவில் கோவில் முன்பு வந்தனர். 

கோவிலின் ராஜகோபுரம் நுழைவு வாயில் அடைக்கப்பட்டதால் திருமணத்திற்கு முன்பதிவு செய்த மணமக்கள் கோவில் முன்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மணக்கோலத்துடன் மணமக்கள் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது என்று கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில் சில திருமணங்கள் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும் என்று ராஜகோபுரம் முன்பு கோவிலுக்கு வெளியிலேயே மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பின்னர் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் முன்பதிவு செய்து இருந்த திருமண ஜோடிகளை அவர்களுடன் 10 நபர்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்று கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். 

Next Story