கோவில்பட்டியில் 34 பேருக்கு கொரோனா
கோவில்பட்டியில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர், வயர் மேன் ஆகிய 2 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ெபாறியாளர்கள், ஊழியர்கள் என 107 பெயருக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா உத்தரவின் பேரில் டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவ குழுவினரால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இவர்கள் வீடுகளிலும், தனியார் ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப் பட்டது.
கோவில்பட்டியில் நேற்று மட்டும் 34 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை இப்பகுதியை சேர்ந்த 198 பேர் கொரோனா தொற்றுக்கு அரசு மருத்துவ மனையிலும், தனியார் மருத்துவ மனையிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story