தூத்துக்குடி மாவட்டத்தில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 793 படுக்கைகளும், ஐ.சி.யு. வசதியுடன் 247 படுக்கைகளும், வென்டிலேட்டர் வசதியுடன் 123 படுக்கைகள் ஆக மொத்தம் 1,770 படுக்கைகள் உள்ளன. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 16 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன், 402 பி வகை சிலிண்டர்கள், 291 டி வகை சிலிண்டர்கள் உள்ளன. மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.
தடுப்பூசி
மேலும் மாவட்டத்தில் இதுவரை 57 ஆயிரத்து 480 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்து 365 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 70 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளிலும், 18 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக மொத்தம் 88 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story