வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
திண்டுக்கல் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி எண்ணப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகளுக்கு ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 123 போலீசார் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உள்பகுதியில் 80 கேமராக்கள், வெளிப்பகுதியில் 44 கேமராக்கள் கண்காணிப்பதற்கு பொருத்தப்பட்டுள்ளன.
மின்தடை ஏற்பட்டால் அதை தடுக்க 7 ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ள சாலை வழியாக கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் தினமும் அதிகம் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வருகின்றன.
வேறு எந்த வாகனங்களும் உள்ளே புகாமல் இருப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த லாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து செல்வதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story