வாய்க்காலில் வீணாகும் தண்ணீர்
உடுமலையை அடுத்த பெரிசனம்பட்டி அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தண்ணீர் வீணாகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி
உடுமலையை அடுத்த பெரிசனம்பட்டி அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தண்ணீர் வீணாகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி.
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு பி.ஏ.பி.பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 153 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த அணையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் எலையமுத்தூரை அடுத்த பெரிசனம்பட்டி அருகே பி.ஏ.பி. தண்ணீர் வீணாகி ஆனைமலை- பழனி சாலையில் சென்று கொண்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
சரியான அளவு திறந்து விட வேண்டும்
எரிசனம்பட்டி அருகே செல்கின்ற பி.ஏ.பி. கிளைக்கால்வாயில் இருந்து தண்ணீர் வீணாகி பழனி-ஆனைமலை சாலையில் சென்று கொண்டு உள்ளது. கடும் வெப்பம் நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமித்து கவனமாக பயன்படுத்த வேண்டிய சூழலில் ஏராளமான தண்ணீர் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகி வருகிறது
இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பி.ஏ.பி. கிளைக்கால்வாயில் பாசனத்திற்கு திறக்கப்படுகின்ற தண்ணீரை அதிகாரிகள் ஆய்வு செய்து அதை வீணாக்காமல் சரியான அளவில் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---
Related Tags :
Next Story