ஒரேநாளில் 376 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. ஒரேநாளில் நேற்று 376 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. ஒரேநாளில் நேற்று 376 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
376 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2-வது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.
அதன்படி ஒரேநாளில் திருப்பூர் மாவட்டத்தில் 376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையை தொட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து அதிகரிப்பு
தற்போது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருக்கிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story