வேப்பனப்பள்ளியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. தமிழக, ஆந்திரா மற்றும் கர்நாடக வனத்துறையினர் இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி கிராமத்திற்குள் 5 யானைகள் வந்தன. இந்த யானைகள் நரசிம்மா நாயுடு என்பவருடைய வாழை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை மிதித்து அட்டகாசம் செய்தன. பின்னர் அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விட்டன. நேற்று காலை தோட்டத்திற்கு நரசிம்மா நாயுடு சென்ற போது வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதை கண்டு கவலை அடைந்தனர். இந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story