வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2021 10:27 PM IST (Updated: 25 April 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் தொற்று காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சேலம் மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

கடந்த 6 நாட்களில் கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story