தர்மபுரி மாவட்டத்தில் 106 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது
தர்மபுரி மாவட்டத்தில் 106 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் கொரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 1,006 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் இருந்து நேற்று 96 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story