கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 11 ஆயிரத்து 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 11 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 108 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 170 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 841-ல் இருந்து 11,970-ஆக உயர்ந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 608 பேர் கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலக்கத்திலேயே இருந்தது. ஆனால் நேற்று 3 இலக்கத்தை தாண்டி இருப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதையே இது காட்டுகிறது.
Related Tags :
Next Story