முழு ஊரடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
முழு ஊரடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.
செஞ்சி,
கொரொனா தொற்று பரவல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதில் செஞ்சியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி யாரேனும் சுற்றிதிரிகிறார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் செஞ்சி பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாராமன், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று முகூர்த்த நாள் என்பதால், திருமண மண்டபங்களில் நடந்த விழாக்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்து கொண்டனர். இதனால் பெரும்பாலான திருமண மண்டபங்களில் உணவு பொருட்கள் மீதமாகிவிட்டதால், அதை முதியோர் இல்லம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story