திருப்பத்தூர்,
கொரோனா தொற்று அதிகளவு பரவி வருவதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு டாஸ்மாக் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நாராயணன் (வயது 65) என்பவர் ஒரு தியேட்டர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தத. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.