காரைக்குடி,
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் குழு காரைக்குடி நகரம், மானகிரி, பாதரக்குடி, கழனிவாசல், செஞ்சை, செக்காலைக்கோட்டை, ஸ்ரீராம் நகர், கோட்டையூர், கண்டனூர் மற்றும் சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் போது தடையை மீறி விற்பனை செய்து வந்த இறைச்சி கடை மற்றும் கொேரானா தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.