ஊரடங்கில் சுற்றி திரிந்தவர்களின் வாகனம் பறிமுதல்


ஊரடங்கில் சுற்றி திரிந்தவர்களின் வாகனம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 April 2021 10:54 PM IST (Updated: 25 April 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் ஊரடங்கில் சுற்றி திரிந்தவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

முழு ஊரடங்கையொட்டி சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அடையாள அட்டை வைத்து இருப்பவர்களை மட்டும் அனுமதித்தனர். அவசியமின்றி சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, துணை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

Next Story