மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை


மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை
x
தினத்தந்தி 25 April 2021 11:06 PM IST (Updated: 25 April 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வந்தது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வந்தது.

மேட்டுப்பாளையம் 

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏரளாமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால், காட்டு யானைகள் குடிநீர் தேடி மலையோர கிராமங்களுக்கு சென்று அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ள ஓடந்துறை வனப்பகுதியில் உள்ள தொட்டி களில் தண்ணீரை குடித்த பின்னர் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. 

சாலையில் உலா வந்த காட்டு யானை 

இந்த நிலையில் மாலையில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்தது. பின்னர் அந்த யானை மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஆடி அசைந்து உலா சென்றது. 

முழு ஊரடங்கு என்பதால், இந்த சாலையில் வாகனங்கள் செல்லாததால், அந்த காட்டு யானை ஹாயாக அலைந்து திரிந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. 

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வனவிலங்கு கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றனர். 


Next Story