கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது


கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 11:46 PM IST (Updated: 25 April 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கல்லுமேட்டுபட்டியை சேர்ந்தவர் இந்திரமூர்த்தி (வயது 54). இவர் கல்லுமேட்டுப்பட்டி அருகே ஆரியூர் பிரிவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி இரவு 8 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் இரவு 10 மணிக்கு 2 மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.4,640-யை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் உப்பிடமங்கலம் ஜோதிபடத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) என்பதும், இந்திரமூர்த்தி கடையில் இருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.
 இது தொடர்பாக இந்திரமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மோகன்ராஜை கைது செய்து, அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடி ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story