நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்த புதிய திட்டம்


நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்த புதிய திட்டம்
x
தினத்தந்தி 25 April 2021 11:59 PM IST (Updated: 25 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்த புதிய திட்டத்தை செயல்படு்த்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

சிவகங்கை

நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்த புதிய திட்டத்தை செயல்படு்த்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

ஆய்வு

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் குடிநீரில் நவீன முறையில் சுத்தப்படுத்தும்(குளோரினேசன்) பணி நடந்தது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி.நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தற்பொழுது நோய் தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குளோரினேசன் செய்வதற்கு புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுத்தப்படுத்தும் பணி

அதன்படி ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும், அருகாமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீர் ஏற்றத்திற்கான செல்லும் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டு தரைப்பகுதியில் இருந்தே பணியாளர்கள் எளிதாக குளோரினேசன் கலந்து குடிநீரை சுத்தம் செய்ய முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக ஒவ்வொரு முறையும் நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் மேலே செல்லும் பொழுது குளோரினேசன் செய்யும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், பொது மக்களுக்கு வழங்கும் குடிதண்ணீர் சுத்தம் செய்யப்பட்ட குடிதண்ணீராக கிடைக்கும்.
தற்பொழுது 445 ஊராட்சிகளிலும் உள்ள 2 ஆயிரத்து 923 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் தொழில்நுட்பத்துடன் கூடிய இணைப்புகள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் குளோரினேசன் முறை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சண்முகம், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story