சிறுமி பாலியல் பலாத்காரம்


சிறுமி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 26 April 2021 12:02 AM IST (Updated: 26 April 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கது செய்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ைகது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் 
நாகை மாவட்டம் மேலபோலகம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் தினேஷ்குமார் (வயது 19). இவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் சிறுமி உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாப்படுகை கங்கை நகரை சேர்ந்த முருகவேல் (35) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தனது ஊரான பெருஞ்சேரிக்கு வந்து மங்கநல்லூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மங்கநல்லூர் அண்ணா நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் சிங்காரவேலன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
போக்சோவில் 3 பேர் கைது  
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால் சிறுமி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது அவள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  தினேஷ்குமார், முருகவேல், சிங்காரவேலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story