கண்மாயில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
விருதுநகர் அருகே நீச்சல் பழகிய போது கண்மாய் நீரில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே நீச்சல் பழகிய போது கண்மாய் நீரில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கண்மாய்
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மோகன் (வயது 11). 5-ம் வகுப்பு படித்து வந்த இவன் தனது உறவினரான கடம்பங்குளத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி சுந்தர மூர்த்தி (22) என்பவரின் உதவியுடன் கடம்பங்குளம் கண்மாயில் நீச்சல் பழக சென்றான்.
நேற்று மாலை 4 மணி அளவில் கடம்பங்குளம் வந்த சிறுவன் மோகனை அழைத்து கொண்டு சுந்தரமூர்த்தி கடம்பங்குளம் கண்மாய்க்கு சென்றார்.
2 பேர் சாவு
கண்மாயில் 8 அடி ஆழம் தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி சிறுவன் மோகனுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கண்மாய் பகுதிக்கு சென்று சுந்தரமூர்த்தி, மோகன் உடல்களை மீட்டனர்.
போலீசார் விசாரணை
சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்மாயில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீச்சல் பழக சென்ற சிறுவனும், வாலிபரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story